சீன நிறுவனம் ஒன்றிற்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றில் தீர்ப்பு!

சீனாவின் சட்ட நிறுவனமான பாக்கியன் லா குரூப் லங்கா பிரைவேட் லிமிடெட்( Baqian Law Group Lanka Pvt. Ltd, ) இலங்கைக்குள் எந்தவொரு சட்டப்பூர்வ தொழில்முறை பணிகளிலும் ஈடுபட சட்டத்தில் உரிமை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அடிப்படை உரிமை மனு
இலங்கையில் சட்ட சேவைகளை வழங்குவதாகக் கூறப்படும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமொன்றை இணைப்பதற்கு கம்பனிகளின் பதிவாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து சட்டத்தரணி நயந்த விஜேசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பாக்கியன் சட்டக் குழுவை வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இணைத்த போது, அதன் முதன்மை நோக்கம் சட்டவிரோதமானது என்பதால், நிறுவனங்களின் பதிவாளர், நாட்டின் சட்டத்தை மீறிச் செயற்பட்டுள்ளார் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor