சூரினாம் நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ கிராம் கொக்கேய்ன் இலங்கை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
மேலும், இன்றைய தினம் (18-10-2022) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 26 வயதான இந்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர், பிரேசிலில் இருந்து கத்தாருக்குப் பயணம் செய்து, பின்னர் கத்தார் ஏர்வேஸ் மூலமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
உணவுப் பொருட்கள் என பெயரிடப்பட்ட ஐந்து தகரப்பேணிகளுக்குள் அவர் எடுத்து வந்த கொக்கேய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கேய்னின் சந்தை மதிப்பு சுமார் 13 கோடி ரூபாவாகும். இதனையடுத்து குறித்த பெண், காவல்துறையின் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.