காலநிலை தொடர்பில் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மத்திய வங்காள விரிகுடாவில் முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியானது அடுத்த இரு தினங்கள் அளவில் தாழமுக்கமாக மாறும் வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (19-10-2022) நாளை (20.10.2022) கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது மேலும் விருத்தியடைந்து 22.10.2022 அல்லது 23.10.2022 அளவில் நடுத்தர அளவிலான புயலாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

இது புயலாக மாறினால் வடக்கு வடகிழக்கு திசை நோக்கியே ( இந்தியாவின் ஒடிசா அல்லது மேற்கு வங்கம்) நகரும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இன்று இரவு முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு வெப்பச் சலன செயற்பாடும் காணப்படுகிறது. எனவே கடுமையான இடிமின்னல் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.

குறிப்பாக நாளை யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor