ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் வெளியவருவது,
குறித்த 18 புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் – போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர்.
சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்கள் லொறியில் கண்டுபிடித்தனர். அவர்களில் 5 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர், மேலும் 14 வயதுடைய இரண்டு ஆதரவற்ற சிறார்கள் இருந்தனர்.
அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஜேர்மன் காவல்துறை கூறியது. அவர்களில் 12 பேர் ஈரானிலிருந்தும், 4 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்தும், இருவர் ஈராக்கிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். அவர்களின் வயது ஐந்து முதல் 44 வரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்தோர் பதுங்கியிருந்த கண்டெயினரில் சுத்தமான காற்றோ வெளிச்சமோ இல்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பசி, தாகம் மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களை Eisenhüttenstadt நகரத்தில் அருகிலுள்ள வரவேற்பு மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், துணையில்லாத இரு இளைஞர்களை ஜேர்மனியின் இளைஞர் அதிகாரிகளான Jugendamts பொறுப்பேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் 32 வயது ஓட்டுநர், லிதுவேனியன் நாட்டவர், விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.