இந்தியாவுடன் உடன் படிக்கை ஒன்றில் கைச்சாத்திடும் இலங்கை

இலங்கை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள கடனை மறுசீரமைப்பதற்காக எக்டா என்ற இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட இரு நாடுகளும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

சீனா, இந்தியா ஆகிய பிரதான கடன் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொடர்பில் அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைத்துக்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவித்துள்ளது.

உடன்படிக்கையில் கைச்சாத்திட இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒரு தவணை கடன் கூட கிடைக்காது. இதன் காரணமாக இலங்கை அரசு சீனா மற்றும் இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் கீழ் இந்தியா மற்றும் இலங்கையில் இடையில் எக்டா என்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் விரைவில் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் உயர் மட்ட இணக்கப்பாடுகள் எட்டப்படும் என தகவல்கள் கூறுகின்றன

Recommended For You

About the Author: webeditor