கொழும்பில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் நெற்றியில் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடமே இவ்வாறு நடந்துள்ளதாக, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் நேற்று (13-10-2022) அறிவித்தது.
எல்பிட்டியவில் வசிக்கும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நிமித்தம் காரணமாக நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, மாடிப்படிக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பின்னால் வந்து வலுக்கட்டாயமாக இழுத்து இவ்வாறு நடந்துக்கொண்டதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்தச் செயல் தமக்கு மிகுந்த அச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.