கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சீன தம்பதியினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது!

‘ஸ்போர்ட்ஸ் செயின்’ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் 35 மற்றும் 25 வயதுடைய கொழும்பு 5 பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor