முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக மூடப்படுமா IOC எரிபொருள் நிரப்பு நிலையம்

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான வெல்லவே பெற்றோல் நிலையத்திற்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கிடைத்த புகார்களின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகாரசபை, எடை அளவீடு திணைக்களம் இணைந்து கடந்த 5-ம் திகதி விசாரணை நடத்தி சீல் வைத்தது.

தற்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் இரண்டு வருடங்கள் செயற்படாமல் இருப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.லங்கா

Recommended For You

About the Author: webeditor