உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் உடனடியாக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டசின் கணக்கான வறிய, கடனாளி நாடுகள் கடும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.
பல நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.