பதுளை, மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என மீகஹகிவுல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடுகள் சரிந்து விழுந்தமையால், போக்குவரத்து ஒரு வழித்தடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதுளைக்கும் கந்தகெட்டியவுக்கும் இடையில் இவ்வாறு மண் மேடுகள் சரிந்துள்ளன.
சரிந்த மண் மேடுகளை அகற்றும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
எனினும், இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

