புலம்பெயர் தொழிலாளர்கள்: கவனத்த ஈர்க்கும் அரசாங்கம்

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாண்டில் அனுப்பிய மொத்தத் தொகை 1.53 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.7 வீதம் அதிகமாகும்.

மார்ச் மாதத்தில் மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 572.4 மில்லியன் டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, புலம்பெயர் தொழிலாளர்கள் வங்கி முறையின் மூலம் இலங்கைக்கு நிதியை அனுப்புவதற்கான சட்ட வழிகளை எளிதாக்கியுள்ளது.

இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்னளை ஈர்க்கும் பலத் திட்டங்களும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1. மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள்

2. மனுசவி ஓய்வூதியத் திட்டம்

3. பல்நோக்கு கடன் திட்டம்

4. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக பிரிவு.

இந்த நடவடிக்கைகள் பணம் அனுப்புவதை ஈர்த்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்திக்கொள்ள மேலும் பலத் திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin