எரிபொருள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் எரிபொருளுக்கான தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடும் நெருக்கடி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்ககையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எரிபொருள் பாவனை கணிசமாகக் குறைந்துள்ளது.

எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப்பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

முன்னைய பாவனையுடன் ஒப்பிடும் போது அத்தியாவசியப் பயணங்களுக்கு வாகனங்களில் எண்ணெய் பயன்படுத்துகின்றனர். முச்சக்கர வண்டிகள், பைக்குகளை ஓரளவே பயன்படுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor