இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் ஏற்றுமதி வீதம் குறைவடைந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆடை, ரப்பர், ரப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் ஏற்றுமதி தேவை குறைவதால் பொருட்களின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்றுமதியில் சரிவு
இதேவேளை 2022 ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் கடல் உணவுகளின் ஏற்றுமதி வருவாய் 3.73 வீதம் அதிகரித்து 20.29 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.

அலங்கார மீன்களின் ஏற்றுமதி வருமானம் ஒக்டோபர் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஒக்டோபரில் 35.71வீதம் அதிகரித்து 2.47 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே பெறுமதியின் அடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதி வீதம், 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செப்டெம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும் போது இது 13.13 வீதக் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor