மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது, வடமேற்குத் திசையை நோக்கி நாட்டிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று, தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும்.
இதன் பிறகு வடதிசையை நோக்கி திரும்பி, நாளை தென் ஆந்திராப் பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால்,நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.