மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட உள்ளது.

மின்சார கட்டணம்
எனினும் மசகு எண்ணெய்க்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.

மின்சாரக் கட்டணத்திற்கும் பெறுமதி சேர் வரி சேர்க்கப்படுவதனால் அதன் கட்டணமும் அதிகரிக்கும்.

எனினும், மண்ணெண்ணெய்க்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor