2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம் என்று திணைக்களம் கூறியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நவ.16 வெளியிடப்பட்டதுடன், ஒவ்வொரு மாவட்டத்தின் சிங்கள, தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.
வெட்டுப்புள்ளி அறிவிப்பு
இம்முறை பரீட்சையில் 3,32,949 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு 145 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்கு 147 புள்ளிகளும், நுவரெலியா கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 144 வெட்டுப்புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், மொனராகலை, மன்னார் மாவட்டங்களுக்கு 143 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.