அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பிரதம செயலாளர் அநுர திசாநாயக்கவின் தலைமையிலான 06 பேர் கொண்ட அறிக்கையின் மூலம் அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

55 வயது நிறைவடைந்துள்ள மற்றும் 20 வருட அரச சேவையிலுள்ள இவ்வாறான முறைமையொன்றை தயாரிப்பதற்காக அரச சேவை இணைப்பு செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக, அமைச்சரவையினால் இக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
இதற்குப்பதிலாக அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைந்ததான வெற்றிடங்களை நியமிப்பது தொடர்பில் புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக விசேட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள அதிகாரிகளை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன .

நிறுவனம் ஒன்றுக்காக ஒரு அதிகாரியை மாத்திரம் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு அந்தக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இடமாற்றங்களை மேற்கொள்ளும்போது, தாம் நிரந்தரமாக வசிக்கும் பிரதேசத்துக்கு இடமாற்றம் பெறுவதற்கான முன்னுரிமையை வழங்குவதற்கும் அந்தக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor