எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்புவது தமது பிரதான நோக்கமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரவு செலவுத் திட்டம்
ஊடக நிறுவன பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் திடமான முடிவு எதனையும் அவர் வெளியிடவில்லை.
நாட்டின் மெய்யான பொருளாதார நிலைமைகளை வெளிப்படுத்திய காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த பொது தேர்தலில் தோல்வியை தழுவ நேரிட்டது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெற்றியீட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிக்கும் வழிகளின் மூலம் நாடு வாங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.