மயான பூமியாக மாறும் காசா மருத்துவமனை

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் காசாவின் பிரதான மருத்துவமனையான அல்ஸிபா ஒரு மயானமாக மாறிவருகின்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

காசாவின் வடக்கில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அருகில் கடந்த சில நாட்களாக கடும்மோதல்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் ஹமாஸ் மருத்துவமனைக்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ள நிலையில், மருத்துவமனை வட்டாரங்கள் அதனை நிராகரித்துள்ளன.

உடல்களை உண்ணும் நாய்கள்
இர்ருதரப்பு போருக்கு அஞ்சி மருத்துவமனைக்கு உள்ளே 600 பேர் உள்ளனர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் தஞ்சமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையை சுற்றி கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காணப்படுகின்றன அவற்றை எடுக்கவோ மயானத்திற்கு கொண்டுசெல்லவோ முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

அதோடு மருத்துவமனை தற்போது இயங்கவில்லை என குறிப்பிட்ட அவர், அது ஒரு மயானமாக மாறிவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மருத்துவமனையில் உடல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் அவைஅழுகும் நிலையில் காணப்படுவது குறித்தும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அழுகும் நிலையில் உள்ள உடல்களை வெளியே எடுத்துச்செல்வதற்கு மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னமும் அனுமதியளிக்கவில்லை என பிபிசிக்கு தெரிவித்துள்ள வைத்தியர் முகமட் அபு செலெய்மா, நாய்கள் உள்ளே நுழைந்து உடல்களை உண்ணதொடங்கியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor