இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை (நவம்பர் 01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, இந்திய வம்சாவளி தமிழர்கள் (IOTs) இலங்கைக்கு வருகை தந்ததன் 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் 02 கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்துள்ள ‘நாம் 200’ நிகழ்ச்சியில், அமைச்சர் சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றயுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் சீதாராமன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.