இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு!

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிதுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை ஏற்றம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு
கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய யுத்த சூழ்நிலையில் கப்பல்கள் சுயஸ் கால்வாயில் பயணிப்பதால் அபாய காப்புறுதி கட்டணத்தை அக் கப்பல் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் எனவும் சந்தை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor