நோர்வே நாட்டின் முதல் இலங்கை தமிழ் பெண் விமானி!

யாழ். குருநகரில் இருந்து புலம்பேர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் செல்வ மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை தனது தந்தையின் ஆசை, கனவை நனவாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்து பின் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து இறுதியாக 10.10.2023 இல் தனது விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.

தந்தை தான் ஒரு விமானியாக வரவேண்டும் என்ற ஆவாவினால் பல முயற்சிகளை மேற்கொண்டு விமானியாக வராவிட்டாலும் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து முதல் தமிழ் பேசும் ஒருவராக 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிகின்றார்.

தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஸ்ரங்கள், சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.

பல துறைகளில் சாதித்த அனைவருக்கும் மற்றும் நோர்வே நாட்டில் முதல் தமிழ் பெண் விமானியை உருவாக்கிய பெற்றோருக்கும் வாழ்த்துக்களை பகிர்வதில் குருநகர் நலன்புரிச்சங்கம் பெருமிதம் கொள்வதாக முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor