வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் அடுத்த ஆண்டு மாதம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தக் காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்திற்கு மேலதிகமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

கடுமையாகும் சட்டம்
இதனை விட அதிகமாக கைது செய்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவிலிருந்து அதிகூடிய பணப்பரிசு வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor