ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகள்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது
இந்த சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளதுடன்இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ‘அயன் டோம்’ பாதுகாப்பு அமைப்புகள் உள்ள நிலையில் போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.