நோயாளர் காவு வண்டி இன்மையால் பறிபோன உயிர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற இத் துயர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

3 வருடங்களாக நோயாளர் காவு வண்டி இல்லை
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதேசமே வேரவில் பிரதேசமாகும். அம்மக்களின் வைத்திய தேவைகளை மிக நீண்ட ஆண்டுகளாக முன்னெடுக்கும் பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர் காவு வண்டி இல்லை.

அதற்கு பதிலாக பொருத்தமற்ற வாகனம் ஒன்று தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெற்ற போது, வாகன வசதி ஏதும் இல்லாமையால் விபத்துக்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாது போனது.

அதனால் 1990 வாகனத்தின் உதவியுடன் அழைத்து சென்றபோதிலும் விபத்தில் சிக்கிய குடும்பஸ்தரின் உயிர் இடைநடுவில் பிரிந்ததாக உறவினர்க?ள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்நிலையில் இவ்வாறான இழப்புக்களை இனியும் அனுமதிக்காதிருக்க எமது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்க வேண்டும். கற்பிணி பெண்களிற்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டி ஏற்பட்டால் மிக மோசமான சம்பவங்களும் நடைபெறும் அபாயம் உள்ளது.

நாம் தொடர்ந்தும் அச்சத்துடன் இருக்கின்றோம் எனவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த சிதம்பரநாதன் வர்மக்குமாரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன் தினம்(17) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor