கடந்த சில தினங்களாக பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக காவத்தமுனை-ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அக்கீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியார் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முன்னெடுத்த முயற்சியின் பயனாக களத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து கல்குடா டைவர்ஸ், அக்கீல் அவசர சேவைப்பிரிவு அணியினர் இப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.
தற்போது குறித்த காட்டு யானை காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பகுதிக்குள் புகுந்த குறித்த காட்டு யானை பிரதேசவாசிகளின் பயன்தரும் மரங்கள், மதில்களை நாசப்படுத்தி இருந்ததுடன், உயிரச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருந்தது.
குறித்த பணியினை வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள், கல்குடா டைவர்ஸ், அக்கீல் அவசர சேவைப்பிரிவினர் முன்னெடுத்தனர்.
இருப்பினும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.