சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபகாலமாக கோழி இறைச்சி விலை 1500, 1600 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், நுகர்வோர் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யாததாலும் சந்தைக்கு அதிகளவு கோழி இறைச்சி விநியோகம் கிடைப்பதாலும் ஒரு கிலோ உறைய வைக்கப்படாத கோழியின் விலை 850 – 950 ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor