இஸ்ரேலில் உயிரிழந்த கனடிய பிரஜைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.
கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
காசா நிலப்பரப்பில் சிக்கி உள்ள கனடியர்களினால் வெளியேற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேலில் தங்கி இருந்த மூன்று கனடியர்கள் பற்றி இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த விபரங்களை கனடிய வெளிவகார அமைச்சு வெளியிட்டிருந்தது.
எனினும் தற்பொழுது ஐந்தாவது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பான எந்த ஒரு விபரங்களையும் வெளியிடவில்ல.
இஸ்ரேலில் 6800 கனடியர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் 450 பேர் மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காசா பிராந்தியத்தில் தங்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது