அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது.
அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் 50 ஆவது போட்டி நடைபெற்றுள்ளது.
பூசணிக்காய் போட்டி
இந்த போட்டியில், தங்களுடைய விவசாய நிலங்களில் பூசணிக்காய் வளர்க்கும் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப்போட்டியில் கலந்து கொண்ட மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான 43 வயதுடைய டிராவிஸ் கிரெய்கர் என்பவர் மிகப்பெரிய பூசணிக்காய் வளர்த்தமைக்காக போட்டியின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பூசணிக்காயின் எடையானது 1,247 கிலோகிராம் ஆகும் என்பதுடன் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.