சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பணிப்புரையின் பிரகாரம் ‘Isolez Biotech Pharma’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மருந்து விநியோக ஆர்டர்களையும் இடைநிறுத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணைகள் முடியும் வரை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், மருந்து வழங்குநருக்கு தொடர்ந்து பணம் செலுத்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அண்மைக்கால பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மருந்து வழங்குனருக்கு எதிராக பொருத்தமான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.