மீண்டும் எரிபொருளுக்கான (QR) முறைமை

நாட்டில் மீண்டும் எரிபொருள் கோட்டா முறை (QR) நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எரிபொருள் நெருக்கடி
தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை

மேலும், உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor