பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையில் சகல தர மாணவர்களும் நாள்தோறும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (08-10-2023) இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாள்தோறும் பாடசாலைக்கு வராவிட்டால் எதிர்வரும் பரீட்சைகளுக்கு மதிப்பெண்கள் கிடைக்காது என தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்பட்டாலும், ஆரம்ப வகுப்புகள் 2024 ஜனவரியில் பாடசாலைகளில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுபட்ட அனைத்து விடயங்களை உள்ளடக்கும் செயற்பாடுகளும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதற்கேற்ப விடுமுறை காலம் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor