உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா திகழ்கிறது.
ஆனால் மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளை சீனா தற்போது சந்தித்து வருகிறது.
மேலும் நாட்டின் பெரும் கடனாளியான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை கண்காணிப்பின் கீழ் உள்ளார். அத்துடன் பங்குச் சந்தையில் இருந்து இந்நிறுவனம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியிலான இதுபோன்ற சிக்கல்கள் சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றன. இத்தகைய சூழலில், உலகின் பிற நாடுகள் சீனாவின் இந்தப் பாதிப்பு குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
சீனா சந்தித்து வரும் பாதிப்புகளால் பிற உலக நாடுகள் சந்திக்க உள்ள நெருக்கடிகள் பற்றிய கவலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் பணியாளர்கள் மற்றும் சீனாவுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள்கூட அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார ரீதியான பாதிப்பின் எதிரொலியாக சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.