பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் பென் வாலேஸ் (Ben Wallace), பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பிவைத்துள்ள தெரிவிக்கப்படுகின்றது.
நேட்டோ உச்சி மாநாடு ஒன்றில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டே இருக்க, பிரித்தானியா ஒன்றும் அமேசான் நிறுவனம் அல்ல என்று பென் வாலேஸ் கூறியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம்
அத்துடன், அவரை நேட்டோவின் அடுத்த தலைவராக்க எடுக்கப்பட்ட பிரித்தானியாவின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்த கோடையில் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த பென் வாலேஸ், இன்று காலை பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எழுதிய கடிதத்தில், ’நான் புறக்கணித்த வாழ்க்கையின் சில பகுதிகளில் முதலீடு செய்வதற்காகவும், புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் பதவி விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.