நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் சில இடங்களில் அன்றாட உணவினை தயார்ப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் வாழ்க்கையினை கொண்டு செல்லும் குடும்பங்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் பிபில ரடலியத்த கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட தாய் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று பிள்ளைகளுடன் குடிசையில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த குடும்ப நிலை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; கணவனை இழந்து ரதலியத்த இகியங்கொட கிராமத்தில் குடிசையில் வசித்து வரும் டி.எம்.பத்மாவதி (வயது 36) தனது தாய் மற்றும் பாடசாலை செல்லும் தனது மூன்று பிள்ளைகளுடன் பல வருடங்களாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாளைக்கு 200-300 ரூபாய்
கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் அருகே விளைந்த பயிர்களை அறுவடை செய்து, ஊரிலுள்ள வீடுகளுக்கு விற்று, ஒரு நாளைக்கு 200-300 ரூபாய் சம்பாதித்து, தன் மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.
மூன்று குழந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால், மூன்று வேளையும் பலாப்பழத்தை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட போதிய உடைகள் இல்லை என்றும், இரவில் குப்பி விளக்கை ஏற்றி படிக்க மண்ணெண்ணெய் இல்லை என்றும் அவர் தனது நிலையை கவலையுடன் தெரிவித்தார்.