தமது மகன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் நேற்றைய தினம் (18-08-2023) மன்னிப்பு கோரியுள்ளனர்.
ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு வந்து, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரரைச் சந்தித்த போதே அவர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ளனர்.
நாட்டில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது இங்கு இல்லை.
இதன் பின்னணியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த போதகர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.