இலங்கையின் தேசிய மிருகத்தை ( மர அணில் ) மாற்றுவது குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக விவசாயத்துறை, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையின் தேசிய மிருகமாக மர அணில் காணப்படுகின்றது.
இலங்கையின் தேசிய சின்னங்கள்
இலங்கையின் தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய மலர், தேசிய மரம், தேசிய பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன .
தேசிய மலர் – 26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மலராக நீலோற்பலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
தேசிய மரம் – 26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மரமாக நாகமரம் அறிவிக்கப்பட்டது.
தேசியப் பறவை – இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகும். இது இலங்கைக்கு உரித்தான பறவையாகும்.
தேசிய வண்ணத்துப்பூச்சி – இலங்கை அழகி என்ற வண்ணத்துப்பூச்சி இலங்கைக்குரியதும் தேசிய வண்ணத்துப்பூச்சியுமாகும்.
தேசிய இரத்தினக்கல் – சபையர் நீலக் கல் இலங்கையின் தேசிய இரத்தினக்கல் என ஒக்டோபர் 2003 இல் பிரகடணப்படுத்தப்பட்டது.
தேசிய விளையாட்டு – கைப்பந்தாட்டம் இலங்கயைின் தேசிய விளையாட்டாக 1991 இல் அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய மிருகம்- இலங்கையின் தேசிய மிருகமாக மர அணில் காணப்படுகின்றது