நீர்கொழும்பில் மாணவன் ஒருவன் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாணவன் நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்துள்ளார். அ
ப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை தெரிவித்த கருத்து
இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாணவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அன்றி அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார். இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வைத்தியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக் கொண்டான்.
ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார் ” என தெரிவித்துள்ளார்.
மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.