யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிங்களவர் ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும், மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:
30 வருடகால யுத்தம் தமிழ் மக்களுக்கு பாரிய உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிவுகளையும் விளைவித்திருக்கிறது.
இதற்கு காரணமான காரண கர்த்தாக்களது முகத்திரைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கிழிப்பேன்.
இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு தான் நிலவுகின்றது என்றால், இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களால் சகோதரர்களாக நடத்தப்படாமல் மாற்றான் தாய் மக்களாக கொல்லப்படுவது ஏன்? இவை தொடர்பான உண்மைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்துவேன்.
மேலும் இவர்களால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான கொலைகளின் 27,900 படங்கள் என்னிடம் இருக்கிறது.
மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகள் தொடர்பான காணொளிகள் என்னிடம் இருக்கிறது.
அதனை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்க நான் தயார். அதற்கு எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். அவற்றை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.
இதேவேளை, 01.09.2021 அன்று இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உடனடியாக விசாரைணகளை ஆரம்பிக்கும் படி நான் சமர்ப்பித்த போர் இரகசிய விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.