கனேடிய பிரதமரை கிண்டல் செய்யும் ஊடகங்கள்

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்யும் வகையில் அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோ தனது வாழ்க்கைத் துணையை பிரிவதாக அறிவித்திருந்தார்.

18 ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவுக்கு வருவதாக இருவரும் சமூக ஊடகத்தில் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கனடிய ஊடகங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு செய்தி தலைப்புகளை இட்டிருந்தன.

அவற்றில் குறிப்பிட்ட ஒரு பத்திரிகை தந்தையைப் போன்றே மகன் என எழுதியிருந்தது.

முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையுமான பியேவ் ட்ரூடோ பதவி வகித்த காலத்தில் தனது துணைவியான மார்கிரட்டை விவாகரத்து செய்தார்.

தந்தையின் வழியை ஒட்டி அவரது மகன் ஜஸ்டின் பதவிக் காலத்திலேயே தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார் என ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சில கனடிய ஊடகங்கள் கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor