ஜனாதிபதி வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் முன்னாள் நீச்சல் வீரர் ஒருவரிடம் விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங்கிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்ற விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் ஜுலியன் போலிங் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வர்த்தகரான ஜொனதன் மார்டென்ஸ்டைன் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பிழை செய்திருந்தால் தண்டனையை ஏற்க தயார்
இதேவேளை, தாம் ஏதேனும் பிழை செய்திருந்தால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார் என போலிங் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள வீதியிலேயே தமது வீடும் அமைந்துள்ளதாகவும், இதனால் இவ்வாறு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் குறித்து தாம் அதிருப்தி அடையவில்லை எனவும், ஜனாதிபதியின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor