நாட்டை விட்டு 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளியேற்றம்!

இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் கொழும்பில் (01.08.2023) அன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்த்தன கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். ஆதலால் 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

Recommended For You

About the Author: webeditor