இந்தியர் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

நாடு முழுவதும் இந்திய நபர் போல் நடித்து பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்து வந்த நபர் கண்டி தலைமையக பொலிஸாரால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் பிரதான ஹோட்டல் ஒன்றில் 2 நாட்களாக தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு கிடைக்க பெற்றதையடுத்து, சந்தேக நபரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது கைதானவர் இலங்கையை சேர்ந்த தமிழர் என்பது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையின் போது, சந்தேக நபர் இலங்கை முழுவதும் மேற்கொண்ட பாரிய மோசடிகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் சுவிஸ், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு செல்ல விசா தயார் செய்து தருவதாக கூறி இந்திய பிரஜை போல் நடித்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற பேராதனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 30 முறைப்பாடுகள் உள்ளதாகவும், பல பொலிஸ் பிரிவில் 22 பிடியாணைகள் இருப்பதாகவும் சந்தேக நபரின் அடையாள விபரங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor