கொழும்பில் இன்றுமுதல் மூடப்படும் தூதரகம்!

இன்று (31) முதல் இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று முதல் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

இந்தியாவின் புதுடில்லியில் ஏற்பாடு
அதேவேளை இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக ஏற்கனவே நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor