கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் லண்டனில் தனது நண்பியைச் சென்ற வாரம் சந்திக்க சென்றுள்ளார்.
கண்டும் காணாததுபோல விட்ட கணவர்
லண்டன் வருவதற்கு முன்னரே கனடா குடும்பஸ்தர் தனது மனைவியுடன் தகாத முறையில் பேசுவதை கணவன் கண்காணித்து வந்திருந்தாலும் அதைப்பற்றி மனைவியிடம் கேட்காது மௌனமாக இருந்துள்ளார்.
இந் நிலையில் லண்டனுக்கு கனடா குடும்பஸ்தர் வரும் தகவலை அறிந்துகொண்டுளார். லண்டன் வந்த கனடா குடும்பஸ்தர் ஒரு நாள் விடுதியில் தங்கியிருந்த பின்னர் கணவன் இல்லாத நேரம் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இரு பிள்ளைகளின் தாயான குறித்த நண்பி தனது பிள்ளைகள் மற்றும் கணவன் இல்லாத நேரத்தை வட்சப் மூலம் கனடா குடும்பஸ்தருக்கு தெரிவித்த பின்னரே கனடா குடும்பஸ்தர் நண்பியிடம் சென்றுள்ளார்.
கனடா குடும்பஸ்தர் நையப்புடைப்பு
கனடா நண்பன் வீட்டுக்குச் சென்றதை உறுதிப்படுத்திய நண்பியின் கணவன் அங்கு திடீரென புகுந்து கனடா குடும்பஸ்தர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கணவரின் தாக்குதலில் தலை மற்றும் முகம் ஆகியவற்றில் படுகாயங்களுக்குள்ளான கனடா குடும்பஸ்தரை பொலிசாரே மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.
அதன் பின்னரே சம்பவம் தொடர்பில் பாடசாலை நண்பியின் கணவனை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
கைதாகிய கணவன் தனது மனைவியின் செயற்பாடு மற்றும் குறித்த கனடா குடும்பஸ்தரின் செயற்பாடு போன்றவற்றின் ஆதாரங்களை பொலிசாரிம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் கணவனின் திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணவர் சிறைக்கு செல்ல நேரிடலாம் எனவும் கூறப்படுகின்றது.