வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் களமிறங்கிய கொழும்பு பொலிசார்

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் மற்றும் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் 21 வயது குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று புதன்கிழமை (26) பெண்ணின் கணவரான 32 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து சென்று பார்வையிட்ட பொலிஸ் தரப்பு இரசாயன பகுப்பாய்வாளர்கள் , தீ வைக்கப்பட்ட வீட்டினை இன்று சோதனை செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து விசேட பொலிஸார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு, வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் ஈநடத்தியதுடன், வீட்டுக்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் 21 வயது இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று இரசாயன பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேவேளை தமிழர் பகுதிகளில் வன்முறைசம்பவங்கள் தலைவிரித்தாடும் நிலையில் நிலையில் , மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor