இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ்அழகையா , புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசியின் தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார்.
ஜோர்ஜ் அழகையா
கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார்.
ஜோர்ஜ் அழகையா ,ஈராக் ,ருவண்டா உட்பட பல நாடுகளில் பணியாற்றியிருந்தார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா, வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம்ஹ சைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார்.
புருண்டியின் உள்நாட்டு யுத்தம் குறித்த செய்திகளிற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் விருதுகளை பெற்ற இவர், ருவன்டா இனப்படுகொலை குறித்து முதன்முதலில் செய்தி வெளியிட்ட பிபிசி செய்தியாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஜோர்ஜ் மக்ஸ்வெல் அழகையா கொழும்பில் பிறந்தார்,அதன் பின்னர் கானாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் பிரிட்டனில் குடியேறினார். இலங்கையிலிருந்து வெளியேறியது மாத்திரமே இலங்கை குறித்த அவரது ஒரே சிறுவயது நினைவாக காணப்பட்டது.
அவரது தந்தை டொனால்ட் நீர் சுத்திரிகரிப்பு பொறியியலாளர் – தனது சொந்தநாட்டில் பாதுகாப்பற்று உணர்ந்ததால் நாட்டிவிடு வெளியேறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கானாவில் வாழ்க்கை சிறப்பானதாக காணப்பட்டது எனினும் திடீர் சதிப்புரட்சியை தொடர்ந்து நிலைமை மாற்றமடைந்தது . அதனை தொடர்ந்து டொனால்ட் தனது குடும்பத்தை பிரிட்டனிற்கு சென்றதாக கூறப்படுகின்றது.
பிபிசி இரங்கல்
இந்நிலையில் ஜோர்ஜ் குறித்த செய்தியை அறிந்து பிபிசி முழுவதிலும் உள்ள அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு துயரத்தில் சிக்குண்டுள்ளோம் என பிபிசியின் இயக்குநர் ஜெனெரல் டிம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் நாங்கள் அவரது குடும்பம் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர், ஜோர்ஜ் எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த துணிச்சலான பத்திரிகையாளராக காணப்பட்டார் .
அவர் உலகம் முழுவதிலும் இருந்து அச்சமின்றி செய்திகளை வெளியிட்டார் என்றும், பிழைகள் இன்றி செய்திகளை வழங்கினார் எனவும் பிபிசியின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.