அண்மையில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களால் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அப்பன் வீட்டு சொத்து அல்ல கிழக்கு மாகாணம் என்று ஒர் அறிக்கை வெளி வந்தது.!!
இதற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்
இவ் அறிக்கையை தெரிவித்த அமைச்சர் உட்பட எனைய எமது மாவட்டத்தை சேர்ந்த இரு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் கிழக்கு மாகாணம் என்பது உங்களுடைய யார் வீட்டு அப்பன் சொத்தும் அல்ல.
வெளியில் உங்களுக்கு இடையில் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியால் அல்லது அந்தஸ்து உள்ள அமைச்சர் என்பதால்லா! அவருடைய அந்த கருத்துக்கு மறு அறிக்கை தெரிவிக்காமல் அவருடைய பரம்பரை சொத்து தான் கிழக்கு மாகாணம் என்பதை நிருபித்துள்ளீர்கள்.
சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சார்ந்த ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள். உங்களுடைய இணக்க அரசியல் இரகசிய பேச்சுவார்த்தை விருந்து உபசாரம் இவைகளை தாண்டி ஒரு விடயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் என்பது யாருடைய அப்பன் வீட்டு சொத்தும் அல்ல என்பதை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையிலும் கிழக்கு மாகாணத்தான் என்ற வகையிலும் எனது பிரதேச மக்கள் பிரதிநிதி என்றவகையிலும் மிக அணித்தரமாகவும் உறுதியாகவும் ஆணவத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
காரணம் நான் வந்தேறிகளின் பரம்பரையல்ல. கிழக்கு மாகாணம் என்பது என் சக கிழக்கு மாகாண மக்களின் பரம்பரை சொத்து. தனிப்பட்ட ரீதியில் நான் உட்பட யாரும் இதற்கு உரிமை கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.