இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டது.
இதனால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
மேலும் வடக்கு இத்தாலியில் உள்ள பல ஏரிகள் மற்றும் ஆறுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கார்டா ஏரியில் 20 முதல் 25 மீட்டர் நீளத்திற்கு கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டுள்ளன.