கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தால் சேதமடைந்த வீடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே எழும்பியதால் அந்த விமானப் பாதையில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவத்தினால் தனது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதாக நீர்கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளர்.

கனிஷ்க சரத்சந்திர என்ற அந்த நபர் தனது சொத்துக்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊடங்கள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

அப்போது வீசிய பலத்த காற்றினால் தனது வீடு மட்டுமின்றி தனது அன்றாடச் செலவுக்கு உதவியாக இருக்கும் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளிட்ட தோட்டங்களும் நாசமாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த வியாழன் 5.30க்கும் 5.50க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாம் இதே நிலையை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு தரையிறங்கிய விமானம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-303 என்பதை கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ330 விமானங்களில் ஒன்றாகும் மற்றும் சுமார் 75,000 என்ஜின் கொண்ட இரண்டு இயந்திரங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor